இந்த ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு லக்கியான ஆண்டு என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த ஆண்டில் வெளியான படங்கள் அனைத்திலும் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார் சூர்யா. இந்த ஆண்டில் முதலாவதாக வெளியான கருப்பு திரைப்படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் தோராயமாக ரூ.360+ கோடி வசூலித்தது.
கருப்பு ஆக்ரோஷமான சாமி படம் என்றால், அடுத்து வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முழுவதும் குடும்ப டிராமா படம். அதுவும் ரூ.130 கோடி பட்ஜெட்டிற்குள் எடுக்கப்பட்டு தோரயமாக ரூ.210+ கோடி வசூலித்து டீசண்ட் ஹிட்டாக மாறியது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள சீன் படமானது ஒரு அட்டகாசமான வசூலை பெற்று வருகிறது.
Buy Now ! Pay Daily !
மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்று வருகிறது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.260+ கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் சூர்யா படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அனைத்தும் ஹிட் அடித்துள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ் இயக்குனர் (ஆர்.ஜே.பாலாஜி), தெலுங்கு இயக்குனர் (வெங்கி அட்லுரி), மலையாள இயக்குனர் (ஜித்து மாதவன்) என ஒரே ஆண்டில் 3 வெவ்வேறு மொழி இயக்குனர்களின் படத்தில் நடித்து மூன்று படங்களையுமே ஹிட் கொடுத்துள்ளார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.






