இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், பரத், ஜெனிலியா, நகுல் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் அவர்களின் மனநிலையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் 2003 ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியானது. 'Boys' திரைப்படத்தின் பழைய போஸ்டர் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அதன் வித்தியாசமான போஸ்டர் வடிவமைப்பு குறித்த விவாதம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Buy Now ! Pay Daily !
குறிப்பாக, போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஒரு வடிவமைப்பை இதுவரை பலரும் துணி காயப்போடும் கம்பி என்றே நினைத்திருக்கலாம். ஆனால், அதை உற்று நோக்கும்போது ஒரு பெண்ணின் இடுப்பைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒரு சாதாரண பொருளைப் போலத் தோன்றும் வடிவமைப்பிற்குள் இத்தகைய மறைபொருள் இருக்கிறதா என்ற ஆச்சரியத்துடன் பலரும் இந்தப் போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தக் காலத்திலேயே வழக்கமான திரைப்படப் போஸ்டர்களிலிருந்து மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் படைப்பாற்றலுடன் உருவாக்கப்பட்ட 'Boys' போஸ்டர், இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.






