திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தூணில் கார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதலாக இந்து அமைப்புகள் பல போராடி வந்தன. கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Buy Now ! Pay Daily !
ஆனால் அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. அதை தொடர்ந்து இன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலையை கொண்டு வந்து, தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி இன்று காலை முதலே தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பக்தர்கள் பலர் மலையேறி செல்ல காத்திருந்த நிலையில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி, மற்றவர்கள் கீழே இருந்து தீபத்தை தரிசித்துக் கொள்ளலாம் என சிஆர்பிஎஃப் வீரர்கள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு எழுந்தது.
இவ்வாறாக பல்வேறு பரபரப்பான கட்டங்களை தாண்டி தற்போது ஒருவழியாக வெற்றிகரமாக தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதை கீழிருந்து பார்த்த மக்கள் அரோகரா கோஷமிட்டு தீபத்தை வணங்கினர்.






