தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிப் பெற்று கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சிலர் தங்கள் வெற்றிப் பெற்ற தொகுதிகளில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றதால் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். தற்போது கொளத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானதால் அந்த தொகுதியும் சேர்த்து 6 தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் முன்னதாக திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட காலியான 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்த தடையை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் மனு அளித்திருந்த நிலையில், அதை பரிசீலித்த நீதிமன்றம் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளுக்கான தடை தொடர்கிறது. தற்போது வி.எஸ்.பாபு மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாகவும், அவருக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தார்மீக ஆதரவு அளிக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், தான் எந்த கட்சிகளோடும் சமரசம் செய்தது கிடையாது என்றும், பதவிக்காக அப்படிப்பட்ட செயல்களை செய்ததில்லை, எப்போதும் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் என கூறியிருந்தார்.
தற்போது கொளத்தூர் தொகுதி காலியாக உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளோடு, கொளத்தூர் தொகுதியையும் சேர்த்து மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.






