← முகப்பு

இவ்வளவு ஆத்திரம் ஏன்? உச்சநீதிமன்றத்துக்கு ஈகோ பிரச்சினையா? – திருமாவளவன் கேள்வி!

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடும் உத்தரவிட்டுள்ள நிலையில், அதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இவ்வளவு ஆத்திரம் ஏன்? உச்சநீதிமன்றத்துக்கு ஈகோ பிரச்சினையா? – திருமாவளவன் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம், தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், கார்த்திகை தீபத்தன்று உத்தரவை பின்பற்றாமல் தீபம் ஏற்றாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், கடும் கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாளையே திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதோடு, சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றத்தைக் கொண்டு வருதல், அறங்காவலர் குழுவை கலைத்தல் உள்ளிட்ட உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ” உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?

இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா? சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?

எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?

கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே? இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?

சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே? இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளன. இந்த உத்தரவைக் கொண்டாடும் விதமாக திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியுள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !