கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மேகதாது பகுதியில் புதிய அணைக்கட்ட முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீர்வரத்து மேலும் குறையும், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு இந்த அணை திட்டத்தை எதிர்த்து வருகிறது.
இப்படியான சூழலில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் டிகே.சிவக்குமார் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுத் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியே கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. ஆனால் டி.கே.சிவக்குமாரோ யார் கண்டித்தாலும் தனக்கு கவலையில்லை என்றும், அணையை கட்டியேத் தீருவேன் என்றும் பிடிவாதமாக பேசியுள்ளார்.
Buy Now ! Pay Daily !
இந்த சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதிய முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்த விவகாரத்தில் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இப்படியான பரபரப்பான சூழலில்தான் இன்று முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வர் விஜய் அங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
அதேசமயம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய வாழ்க்கை வரலாற்று புத்தகம் இன்று டெல்லியில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் விஜய் இந்த புத்தக வெளியீட்டில் கலந்துக் கொள்வதற்காக செல்வதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கிடையே அவர் பிரதமரை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.






