← முகப்பு

வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டு வாங்குவது எப்படி?

வெளியில் இ-சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டுக்கு நீங்களே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதனை எப்படிச் செய்வது என்பதைப் படிப்படியாக, விரிவாகப் பார்ப்போம்.

வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டு வாங்குவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் உலகில் வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் ஐடிஆர் (ITR) தாக்கல் செய்வது, பங்குச் சந்தை முதலீடு, சொத்து வாங்குவது மற்றும் கடன் பெறுவது வரை அனைத்துக்கும் பான் கார்டு (PAN Card) கட்டாயமாகிவிட்டது. இதற்கு விண்ணப்பிக்க இ-சேவை மையங்களுக்குச் சென்றால் ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு நிர்ணயித்த ரூ.107 (GST உட்பட) கட்டணத்திலேயே வீட்டிலிருந்தபடியே நீங்களே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

தேவையான ஆவணங்கள்:

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

  • ஆதார் அட்டை (Aadhaar Card)
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (OTP பெறுவதற்கு)
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஸ்கேன் செய்தது)
  • வெள்ளைத் தாளில் இட்ட கையொப்பத்தின் ஸ்கேன் நகல்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படிநிலைகள்:

-இணையதளத்திற்குச் செல்லுதல்: முதலில் Protean (முன்னாள் NSDL) அதிகாரப்பூர்வ இணையதளமான https://onlineservices.proteantech.in/paam/endUserRegisterContact.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

விண்ணப்ப வகை தேர்வு: முகப்புப் பக்கத்தில் Apply Online பிரிவில், Application Type என்பதில் New PAN - Indian Citizen (Form 49A) என்பதையும், Category என்பதில் Individual என்பதையும் தேர்வு செய்யவும்.

அடிப்படை விவரங்கள்: உங்கள் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் மொபைல் எண்ணைப் பதிவிட்டு Submit கொடுக்கவும். இப்போது திரையில் தோன்றும் Token Number-ஐ குறித்து வைத்துக்கொண்டு Continue with PAN Application Form என்பதை அழுத்தவும்.

ஆவணங்கள் பதிவேற்றும் முறை: அடுத்த பக்கத்தில் Submit scanned images through e-Sign என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

தனிப்பட்ட தகவல்கள்: உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள், பெற்றோர் விவரங்கள், வருமான ஆதாரம் மற்றும் முகவரி ஆகியவற்றைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

ஆவணங்களை இணைத்தல்: அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாக ஆதார் அட்டையைத் தேர்வு செய்து, தயாராக வைத்துள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் நகல்களைப் பதிவேற்றம் (Upload) செய்யவும்.

கட்டணம் செலுத்துதல்: அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்த பிறகு, UPI, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் ரூ.107 கட்டணத்தைச் செலுத்தவும்.

ஆதார் e-Sign சரிபார்ப்பு: கட்டணம் செலுத்தியதும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு விண்ணப்பத்தை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து Continue with e-Sign என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஆதார் OTP மூலம் செயல்முறையை நிறைவு செய்யவும்.

  • ஒப்புகைச் சீட்டு (Acknowledgement): இறுதியாகத் திரையில் தோன்றும் Download PDF என்பதை அழுத்தி விண்ணப்ப ரசீதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதும், சில நாட்களில் மின்னஞ்சலில் இ-பான் கார்டும், அஞ்சல் வழியாக அசல் பான் கார்டும் வீடு தேடி வரும்.

நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரமில்லை என்றால் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையத்தை அணுகலாம். அங்கு சேவைக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.150 முதல் ரூ.250 வரை கேட்டால் நியாயமானது; அதற்கு மேல் ரூ.500 வரை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவையான ஆவணங்கள் கையில் இருந்தால் நீங்களே எளிதாக விண்ணப்பித்துப் பணத்தைச் சேமிக்கலாம்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !