← முகப்புகோயம்புத்தூர் →

40 கோடி ரூபாய் பேரம் பேசினாரா ஸ்டாலின்? போட்டுடைத்த துரை வைகோ!

சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த துரை வைகோ, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

40 கோடி ரூபாய் பேரம் பேசினாரா ஸ்டாலின்?  போட்டுடைத்த துரை வைகோ!

காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பையே திரித்துப் பேசி கர்நாடக முதலமைச்சர் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே கர்நாடக முதலமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக பாஜகவினர் இதுகுறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இரு மாநிலப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவறு செய்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகக் கூட்டணியை உருவாக்க முயன்றதாகவும், 40 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார். நூலகப் புத்தகக் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறிய அவர், இதுகுறித்து அரசு விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஜெம் வீரமணி தொடர்பான வழக்கிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.இதற்கிடையே, ஸ்டெர்லைட் விவகாரம் குறித்துப் பேசும்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் துரை வைகோவுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !