← முகப்புகோயம்புத்தூர் →

தவெக ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்- டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

முதலமைச்சர் விஜய் சினிமாவில் ஹீரோ ஆனால் உண்மையில் வில்லன் என விமர்சித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசனின் சண்டியர் படத்திற்கும் தேவர் சமுதாயத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் எனவே புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதனை அரசியலாக கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்

அமமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தன.

ஆனால், 'மாற்றம் வேண்டும்' என நினைத்து மக்கள் மாபாதகத்தைச் செய்துவிட்டதால், இன்று தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ ஒருவர் போதையில் தவறான செயலில் ஈடுபட்ட சம்பவத்தில் உண்மை இருக்கிறது; ஆனால், இதற்குப் புகாரும் ஆதாரமும் இருக்கிறதா என அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்புவது கண்டிக்கத்தக்கது என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும் பேசிய அவர், எம்.ஜி.ஆருடன் விஜயை ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. சிகரெட், மது போன்ற காட்சிகளில் கூட நடிக்காதவர் எம்.ஜி.ஆர்; அதனால்தான் அவரை மக்கள் 'வாத்தியார்' என்றழைத்தனர். ஆனால், பிளாக்கில் டிக்கெட் விற்றவர்களும், தாய்மொழி தமிழில் பேசத் தெரியாதவர்களும் இன்று அதிகாரத்தில் உள்ளனர். விஜய் சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம்; ஆனால் நிஜத்தில் வில்லன் எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'சண்டியர்' திரைப்படத்திற்கும் சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், கமல்ஹாசன் அனைத்துச் சமூகத்திற்கும் பொதுவானவர் , டாக்டர் கிருஷ்ணசாமி இதனை அரசியலாக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர், பெரியார் அறிவுலகத்தில் போலியான புத்தகங்களை யார் வாங்கியிருந்தாலும் அது தவறே என்றும் தெரிவித்தார்.மேலும், தவெக ஆட்சியை அப்படியே விட்டாலே தானாகக் கவிழ்ந்துவிடும் எனக் கூறிய தினகரன், லஞ்சம் வாங்கிய வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !