← முகப்புதென்காசி →

'கூட்டணி வேறு, கொள்கை வேறு' விஜய் அரசுக்கு வைகோ செக்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

'கூட்டணி வேறு, கொள்கை வேறு' விஜய் அரசுக்கு வைகோ செக்!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ தெரிவித்ததாவது: "தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தலைமையிலான ஆட்சி ஊழலற்ற அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், பதவியையும் அதிகாரத்தையும் பல கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து நிற்கும் சிலர், இந்த ஆட்சி நிலைக்காது எனப் பல்வேறு அடைமொழிகளைக் கூறி விமர்சித்து வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. நேர்மையான அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மதிமுக எப்போதும் தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும்.

அதேநேரம், 'கொள்கை வேறு, கூட்டணி வேறு' என்ற அடிப்படையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முயற்சியைத் தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மீறி அங்குக் கட்டிடம் கட்டும் முயற்சியை அரசு மேற்கொண்டால், அதற்கு எதிராக நான் போராட்டத்தில் ஈடுபடுவேன். மேலும், உலகத்திலேயே புத்தகத்திலும் ஊழல் செய்த அரசு இதற்கு முந்தைய திமுக அரசுதான்" என்று வைகோ பேசினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !