காட்சியில் நடந்தது என்ன? விவாதமும் வெள்ளை மாளிகையின் மறுப்பும்
ஷி ஜின்பிங் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட காணொளியில், ட்ரம்ப் கைகளைக் கோர்த்தவாறு தலையைச் சற்றுக் கீழே சாய்த்து, சுமார் பத்து வினாடிகள் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தது பதிவாகியுள்ளது. அதிகாரிகள் அவரது பின்னால் நின்று பேசும்போதும் சில வினாடிகள் அசந்து விழுவது அப்பட்டமாக தெரிகிறது.
Buy Now ! Pay Daily !
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மீம்ஸ்களாகவும் அரசியல் விமர்சனங்களாகவும் மாறியது. விமர்சகர்கள் இதனைச் சுட்டிக்காட்டி ட்ரம்பின் உடல்நலம் மற்றும் வயது (80) குறித்து கேள்வி எழுப்பினர்; கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசமின் ஊடக அலுவலகம் இந்தச் சூழலைக் குறிப்பிட்டு விமர்சனக் கருத்தைப் பதிவிட்டது.
மறுபுறம், வெள்ளை மாளிகை இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தது. வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங், 'எக்ஸ்' தளத்தில் இது "போலிச் செய்தி" என்று தெரிவித்தார். பேச்சாளர் உரையாற்றும்போது ட்ரம்ப் தமக்கு முன்னால் இருந்த ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும், அவரது கண்கள் அங்குமிங்கும் நகர்வதைக் காண முடியும் என்றும் அவர் வாதிட்டார். ட்ரம்பின் ஆதரவாளர்களும் குறுகிய காணொளி மற்றும் கேமரா கோணத்தைக் கொண்டு அவர் தூங்கினார் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்தனர்.






