உலகம் முழுவதும் வீடியோ கேம்களுக்கு மவுசு குறையாமல் உள்ள நிலையில் 90ஸ் கிட்ஸ் தொடங்கி தற்போதைய ஜென் ஸீ வரை அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கும் கேம்தான் GTA. இதன் 6வது எடிசன் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்தது. பலமுறை கேம் வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியாகி பின்னர் ரத்து செய்யப்பட்டது. இப்படியே கேமர்களை காக்க வைத்துக் கொண்டிருந்த ராக்ஸ்டார்ஸ் கேம் நிறுவனம் ஒருவழியாக நேற்று GTA-6 ஐ உலகம் முழுவதும் வெளியிட்டது.
இந்த கேமை தயாரித்து முடிக்க ராக்ஸ்டார் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இதன்மூலமாக உலகில் அதிகமான பொருட்செலவில் உருவான கேம் என்ற சாதனையை படைத்துள்ளது GTA-6. செலவில் மட்டுமல்லாமல் வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது GTA-6. நேற்று இந்த கேம் வெளியான நிலையில் முன்பதிவுகள், உடனடி விற்பனை என சேர்த்து 24.5 மில்லியன் யூனிட்டுகளை விற்று 2.36 பில்லியன் டாலர்களை ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்த தொகையானது சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே படத்தின் மொத்த கலெக்ஷன் 2.5 பில்லியன் டாலருக்கு மிகவும் நெருக்கமாகும். மேலும் இது ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட காவியமான டைட்டானிக் படத்தின் மொத்த வசூலை முந்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Buy Now ! Pay Daily !
இதுவரையிலான விற்பனையில் 75 சதவீதத்திற்கும் மேல் ப்ளேஸ்டேஷன் 5லும், எஞ்சியவை எக்ஸ் பாக்ஸிலும் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் அதன் நிறுவனங்களின் வீடியோ கேம்களை தொடர்ந்து சீனாவில் வெளியீடு இல்லாமல் இருந்து வரும் நிலையில் இந்த கேமும் சீனாவில் வெளியாகவில்லை. அதனால் GTA-6ன் வசூலில் சற்று குறைவு இருக்கலாம் என்றாலும் கேமிங் கம்யூனிட்டிகளின் கணிப்புப்படி விரைவில் GTA 6 வீடியோ கேம் 3 பில்லியனுக்கும் அதிகமான விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.






