கேம் பிரியர்களின் விருப்பமான கேம்களில் ஒன்றான GTA 6 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சுமார் 14 ஆண்டுகளாய் தொடர்ந்து தயாரிப்பில் இருந்து GTAவிற்காக கேம் பிரியர்கள் ஏங்கிக் கிடந்த நிலையில் இன்று இன்ப அதிர்ச்சியாய் சொன்னபடியே கேம் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளி செல்லும் 2கே கிட்ஸ் முதல் வேலைக்கு செல்லும் 90ஸ் கிட்ஸ் வரை எப்படியாவது லீவ் போட்டுவிட்டு GTA6 விளையாட வேண்டுமென திட்டமிடுகின்றனர்.
அவ்வாறாக லண்டனிலும் GTA வைரலில் பல பள்ளி மாணவர்கள் லீவு போடும் வாய்ப்பு இருப்பதை கண்டறிந்த பள்ளி நிர்வாகம் சமயோஜிதமாய் ஒரு முடிவை எடுத்துள்ளது. வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் பாய்ஸ் மாடல் ஸ்கூல், இன்று மற்றும் நாளை (நவம்பர் 19,20) விடுமுறை எடுக்காமல் வரும் மாணவர்களுக்கு சிறப்புக் குழுக்கல் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் தேர்வாகும் மாணவருக்கு 70 பவுண்ட் (ரூ.8,600) மதிப்புள்ள ப்ளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் கியருக்கான பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
GTA கேம் விளையாடாமல் பள்ளிக்கு வந்தால் கேம் விளையாடும் Playstationகான பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என்ற பள்ளியின் இந்த நூதனமான அறிவிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் லண்டனில் ப்ளேஸ்டேஷனின் ஆரம்ப விலையே 500 பவுண்டுகளுக்கும் அதிகம் என்பதால் இந்த பரிசுக் கூப்பன் அதில் 10 சதவீதமே ஆகும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






