← முகப்புதிருவள்ளூர் →

திருவள்ளூரில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது : ஏழு கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையில் வாகன சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.இருப்பினும் ஆந்திரா, மேற்குவங்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திலும், சென்னைக்கும் கடத்தி செல்வது தொடர்கதையாகவே உள்ளது.

திருவள்ளூரில்  கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது : ஏழு கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் டவுன் எஸ்ஐ குணசேகரன் மற்றும் போலீசார் நகர எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏழு கிலோ 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.மேலும் ஆந்திராவில் இரூந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் வழியாக சென்னைக்கு கடத்தி சென்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிராஜ் (35), அமீர்கான் (32),ராஜா ஷா (19) என்பது தெரிய வந்தது.இதனையடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏழு கிலோ 50 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !