← முகப்பு

வருகிறார் ’டாக்டர் டூம்’! இந்தியாவில் களைக்கட்டும் டிக்கெட் முன்பதிவு!

மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

வருகிறார் ’டாக்டர் டூம்’! இந்தியாவில் களைக்கட்டும் டிக்கெட் முன்பதிவு!

ஹாலிவுட்டின் பிரபலமான மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த 2008 முதலாக ஏராளமான சூப்பர் ஹீரோ படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ரசிகர்களை ஈர்க்கும் மற்றொரு விஷயம் ஒவ்வொரு படமும், கதாப்பாத்திரமும் அடுத்த படத்தோடு இணைத்து கோர்வையாக மார்வெல் உருவாக்கு சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆகும்.

அப்படியாக 2008 முதலாக Marvel Cinematic Universe Infinity Saga தொடங்கி 2019ல் வெளியான அவெஞ்சர்ஸ்:எண்ட்கேம் படத்தில் முடிவடைந்தது. இதன்மூலம் மார்வெலின் முக்கிய ஹீரோக்களான அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஹல்க் மற்றும் பலர் இணைந்து தானோஸ் என்கிற மிகப்பெரிய வில்லனைக் கொல்வதோடு இன்ஃபினிட்டி சாகா முடிவடைந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதை தொடர்ந்து உருவாகியுள்ள மல்டிவெர்ஸ் சாகா, மார்வெல் மீது இன்னும் பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு டைமென்ஷன்களில் இருந்து ஹீரோக்கள் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரும் வில்லனை சந்திக்கவுள்ளனர். முன்னதாக Kang Dynasty என்ற படத்தை திட்டமிட்டிருந்த மார்வெல், Kang என்ற வில்லன் கதாப்பாத்திரத்தை முக்கிய வில்லனாக செட் செய்திருந்தது. ஆனால் காங்-ஆக நடித்த ஜோனதன் மேஜர்ஸ் பாலியல் வழக்கில் சிறைக்கு சென்றதால் அந்த படம் கைவிடப்பட்டது.

அதை தொடர்ந்து டூம்ஸ்டே ப்ராஜெக்டை கையில் எடுத்த மார்வெல், சர்ப்ரைஸாக மார்வெலின் முந்தைய படங்களில் அயர்ன்மேனாக நடித்து புகழ்பெற்ற ராபர்ட் டோனியையே டூம்ஸ்டே என்ற வில்லனாக நடிக்க வைத்துள்ளனர். இது ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதனால் படம் வெளியாகும் தேதியை எதிர்நோக்கி மார்வெல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே மார்வெலின் அவெஞ்சர்ஸ்:டூம்ஸ்டே படத்தை பார்க்க தரமான தியேட்டர்களாக இருப்பவற்றிற்கு மார்வெல் Infinity Vision என்ற சான்றிதழை வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் பெற்ற தியேட்டர்களில் டூம்ஸ்டே படத்தை பார்த்தால் சிறப்பான அனுபவம் கிடைக்கும் என கூறப்படும் நிலையில், சென்னையில் வெற்றி தியேட்டர், கமலா தியேட்டர், ராக்கி சினிமாஸ் என பல திரையரங்குகள் தொடங்கி தஞ்சாவூர், திருச்சி என பல ஊர் திரையரங்குகளும் மார்வெலிடம் இந்த சான்றிதழை பெற்றுள்ளன.

தற்போது ஐமேக்ஸ் திரையரங்குகள், Infinity Vision சான்று பெற்ற திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் என பல திரையரங்குகளில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னரே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !