தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ’நான்’ படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பாடல்களில் ஹிட் கொடுப்பது போல, புதுப்புது கதைகளாக தேர்வு செய்து நடிப்பிலும் ஹிட் கொடுப்பவர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் வெளியான இவரது ’நூறு சாமி’ திரைப்படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள படம் ’அப்பாக்குட்டி’. இந்த படத்தை மு.மாறன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது.
Reach our readers. Contact us to advertise in this space.
விஜய் ஆண்டனியுடன் இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், அருவி மதன், ஜென்சன் திவாகர், ஸ்ரீஜா ரவி, ப்ரவீனா, சித்ரா லக்ஷ்மணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளதுடன், அவரே படத்தின் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
அப்பா-மகள் பாசத்தை மையப்படுத்து உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நவம்பர் 20ம் தேதி வெளொயாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.



