← முகப்பு

வசூலை வாரி குவிக்கும் ராமாயணா PART-1: உலகளவில் "849 கோடி" வசூல் செய்து சாதனை!

நடிகர் யஷ்-ன் சொந்த தாயாரிப்பு நிறுவனமான மான்ஸ்டர் மைண்ட்ஸ் நிறுவனமும், பிரைம் ஃபோகஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படமான ராமாயணா பார்ட்-1, உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. வெளியான வெறும் 6 நாட்களில் இப்படம் உலகளவில் ''ரூ. 849 கோடி" வசூலைக் கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

தொடர்ந்து 6 நாட்கள் சதமடித்து வரும் ராமாயணா part-1; தீபாவளி வின்னராக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் "ராமாயணா". தற்போது இத்திரைப்படத்தின் முதல் பாகமான, "ராமாயணா: பார்ட் 1" (Rise of a legend) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்தியாவில் மட்டும் "ரூ. 94.10 கோடி" ரூபாய் வசூல் செய்துள்ளது . இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வசூல் "ரூ. 526.50 கோடியாகவும்" உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக "ரூ. 297 கோடி" ரூபாய் வசூலாகியுள்ளது.

"RRR" சாதனையை முறியடித்த ராமாயணா பார்ட்-1 :

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

இந்தி திரையுலகின் முன்னனி நட்சத்திரமான ரன்பீர் கபூர் ராமர் வேடத்திலும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக "K.G.F" திரைப்பட புகழ் "யஷ்"ம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ராமயாணா part-1. சுமார் 4000 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக, தீபாவளி பண்டிகை நாளை குறிவைத்து கடந்த நவம்பர் 5ல் வெளியான இத்திரைப்படம் வசூலில் சாதனை செய்து வருகிறது. இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்திராத சாதனையாக, வெளியான நாள் முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரை, தொடர்ந்து 6 நாட்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து, 800 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான "RRR" திரைப்படம் 9 நாட்களில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை பின்னுக்குத் தள்ளி வெறும் 6 நாட்களில் 849 கோடி என்ற இமாலய இலைக்கை எட்டியுள்ளது ராமயாணா பார்ட்-1.

வட இந்தியாவில் அதிக வசூல்:

நாடு முழுவதும் மொத்தம் 24,344 காட்சிகளுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக வட இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் வசூல் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர்.10 அன்று நிலவரப்படி மொழிவாரியாக கிடைத்துள்ள வசூலை இப்போது காண்போம்: இந்தி பதிப்பு : ரூ. 76.00 கோடி கன்னட பதிப்பு : ரூ. 7.75 கோடி தெலுங்கு பதிப்பு: ரூ. 4.00 கோடி தமிழ் பதிப்பு : ரூ. 3.60 கோடி மலையாள பதிப்பு: ரூ. 2.75 கோடி

சாக்னில்க் (Sacnilk) தரவுகளின்படி, இப்படம் ஒரு ஷோவிற்கு சராசரியாக ரூ. 38,726 வரை வசூலித்து அசத்தியுள்ளது.

வார நாட்களில் சிறிய மந்தநிலை:

திங்கட்கிழமையன்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்ட இப்படம், செவ்வாய்க்கிழமையன்று தனது இந்தியா நெட் வசூலில் 12% என்கிற சிறிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும் வார நாட்களிலும் திரையரங்குகள் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.