நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது.
இதனால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனை மற்றும் நாய்களை வனவிலங்குகள் வேட்டையாடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கெந்தளா கிராமத்தில் நேற்று குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. செல்லப்பிராணிகளை வேட்டையாடும் நோக்கில் குடியிருக்கும் வீட்டின் மதில் சுவர் மீது சிறுத்தை ஏறி உலா வந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Buy Now ! Pay Daily !
இந்தக் காட்சி அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




