← முகப்புநீலகிரி →

உதகை மெழுகு அருங்காட்சியகத்தில் மோடியின் தத்ரூப சிலை!

உதகை படகு இல்லத்தில் அமைந்துள்ள சர்வதேச மெழுகு அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி, விஜய் உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் தத்ரூப மெழுகு உருவங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.

உதகை மெழுகு அருங்காட்சியகத்தில் மோடியின் தத்ரூப சிலை!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில், இங்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச மெழுகு அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் என 33-க்கும் மேற்பட்டோரின் மெழுகு உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை பார்ப்பதற்கு அச்சு அசலாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அன்னை தெரசா, மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோரின் மெழுகு உருவங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

திரையுலகைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபலங்களின் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் மெழுகு சிலைகளும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மெழுகு உருவமும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரது உருவங்களை ஒரே இடத்தில் காண முடிவதால், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மெழுகு அருங்காட்சியகம் கூடுதல் பொழுதுபோக்கு அம்சமாக அமைந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !