← முகப்புநீலகிரி →

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலைப்பணிகள் எப்போது நிறைவுபெறும்?

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலைப்பணிகள் எப்போது நிறைவுபெறும்?

நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர மண்சரிவால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலையைச் சீரமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

மண்சரிவின்போது மலைப்பாதையில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி, சாலையை மீண்டும் சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கனரக பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மண்ணை அகற்றி சமன்படுத்துவதுடன் சாலையை விரிவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தற்போது சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களுக்குள் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சாலையின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு காரணமாக நீண்ட நாட்களாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடைந்து மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !