நீலகிரி மாவட்டம் உதவி சுற்றுப்புறப் பகுதியில் இரஇன்று காலை குறைந்தபட்சம் வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் உறைப்பனி பொழிவு காலமாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 15க்கு பிறகு உறைப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு முன்கூட்டியே உறைப்பனி பொழிவு துவங்கி உள்ள நிலையில் இன்று காலை உறைப்பனி பொழிவு அதிகரித்து காணப்பட்டது.
Buy Now ! Pay Daily !
இதனால் புல்வெளி மைதானங்கள், வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போற்றியது போல் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது. குறிப்பாக சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் ஒட்டியுள்ள இடங்களில் உறைப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குட்டி காஷ்மீர் போல் மாறியதால் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மற்றும் இந்த மாதம் துவக்கத்தில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் உறைப்பனி பொழிவு முன்கூட்டியே இன்று அதிகாலை உதகை காந்தல் முக்கோணம், தலைக்குந்தா, லவ்டேல், குதிரை பந்தயம் மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, எச்.பி.எப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புல்வெளி மைதானங்கள், வாகனங்கள், மரம், செடிகள் மீது வெள்ளைக்கம்பளம் போற்றியது போல் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் கடும் குளிர் காரணமாக அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள், பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய நிலையில், குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பல இடங்களில் நெருப்புகள் மூட்டி தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
இன்று காலை உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.கடும் குளிர் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்லாமல் தங்கும் அறையிலேயே முடங்கி கிடக்கின்றனர்






