அவரது அறிக்கை
இந்த ஒப்பந்தங்கள் மூலமாக மாநிலத்தில் சுமாா் 1,32,771 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒப்பந்தம் செய்யப்பட்ட 112 திட்டங்களில், 83 திட்டங்கள் உடனடியாக அடுத்தக் கட்டப் பணிகளுக்கு முன்னெடுக்கப்பட்டு ரூ.59,485 கோடி முதலீடும், 82,728 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதியாகியுள்ளது. ஜவுளி, ஆட்டோமொபைல், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
Reach our readers. Contact us to advertise in this space.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழகத்தை வலுவான தொழில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நாங்கள் உறுதியளித்தோம். தற்போது அந்த வாக்குறுதியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் உகந்த இடமாகத் தமிழ்நாடு உருவெடுத்து வருவதாகவும், முதல்வர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாநிலத்தின் தொழில் வளர்ச்சித் துறை மிகவேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




