← முகப்பு

"வாத்தி ரெய்டு" வரும் : முதல்வர் விஜயின் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு முன்னணி சொகுசு விடுதியில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வாத்தி ரெய்டு" வரும் : முதல்வர் விஜயின் எச்சரிக்கை!

இந்தக் கூட்டத்தின் முதல் கட்டமாக, த.வெ.க.,வைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சட்டமன்றப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெண் எம்.எல்.ஏ.க்கள் அந்த விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய எம்.எல்.ஏ.க்கள் ரவிசங்கர் மற்றும் அருள் விக்னேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் தனிப்பட்ட முறையில் கூடுதல் நேரம் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் எத்தகைய சர்ச்சைகளிலும் சிக்காமல், கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

எதிர்க்கட்சிகளின் சதிக்கு இடம் கொடுக்க வேண்டாம்:

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், கட்சியின் எதிர்காலப் பணிகள் மற்றும் அரசியல் சவால்கள் குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: "நமது கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர்த்து, நமக்கு எதிர்க்கட்சிகளே மிக அதிகளவில் உள்ளன. எனவே, நமக்கு எதிர்ப்புகளும் அதிகம். யாரும் எந்தவிதமான 'ட்ராப்'களிலும் (Traps) சிக்கிக்கொள்ளாமல், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும்." மேலும் பேசிய அவர், நமது அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், அவதூறு செய்திகளைப் பரப்பி அரசு நிர்வாகத்தை முடக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். அத்தகைய சதிச் செயல்களுக்கு த.வெ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இடமளித்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியல் தாக்கம்

பொதுவெளியிலும் சர்ச்சைகளிலும் சிக்கும் கட்சி உறுப்பினர்களைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, த.வெ.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.