கடந்த தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கான கட்டட அனுமதி, நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடமிருந்து 400 கோடிக்கும் மேல் முறைகேடாக வசூல் செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமின் மனு:
Reach our readers. Contact us to advertise in this space.
இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரினார் மகேஷ். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. கடந்த அக்டோபர் 26 அன்று முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து கைது செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் அன்பில் மகேஷ் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
மீண்டும் ஜாமின் கோரிய மகேஷ் தரப்பினர்:
இந்த வழக்கில் தற்போது மீண்டும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மகேஷ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டுள்ளார். 'மனுவுக்கு எண்ணிடும் நடைமுறை இன்று மதியத்திற்குள் முடிந்து விட்டால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


