← முகப்புவேலூர் →

வங்கி மேலாளர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பாதுகாப்பு வசதிகள் நிறைந்த குடியிருப்பு வளாகத்தில், ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கர்ணாம்பட்டு பகுதியில் உள்ள B&B மே ஃப்ளவர் குடியிருப்பில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் எட்வின் தனது மனைவி ஜெயசூர்யாவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் கம்பி வேலியை உடைத்து, பின்புற கிரில் கதவு வழியாக உள்ளே புகுந்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பின்னர் மேல்மாடியில் இருந்த பீரோவை உடைத்து, சுமார் 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அதே குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனமும் திருடப்பட்டது தெரியவந்தது.

முகமூடி, கையுறைகள் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அருகிலுள்ள மேலும் இரண்டு வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு வசதிகள் நிறைந்த குடியிருப்பிலேயே நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !