← முகப்புகரூர் →

கரூரில் பட்டப் பகலில் இளைஞரை கடத்த முயன்ற கும்பல்!

கரூரில் பட்டப்பகலில் தோழியுடன் பைக்கில் சென்ற இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்த முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் பட்டப் பகலில் இளைஞரை கடத்த முயன்ற கும்பல்!
காதலியுடன் சென்ற இளைஞரை பட்டப் பகலில் கடத்த முயன்ற கும்பல்
காதலியுடன் சென்ற இளைஞரை பட்டப் பகலில் கடத்த முயன்ற கும்பல்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் மைதானத்திற்கு அருகே, தோழியுடன் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள சித்தலவாய் நோக்கி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பார்சுனர் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அந்த இளைஞரை நிறுத்தி சட்டையை பிடித்து தாக்கி தரதரவென இழுத்துக் கொண்டு காரில் ஏற்ற முயற்சி செய்த முயன்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது காரை கல் எரிந்து சேதப்படுத்தியதாக அந்த நபர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் கார் கண்ணாடி எதுவும் உடையவில்லை என்றும் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களிடம் கல்லெறிந்தது தொடர்பாக புகாரை எழுதித் தரும்படி காவல்துறையே கடத்தல் கும்பலுக்கு கருணை காட்டி புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரித்து வரும் வினோதம் நடந்தேறி உள்ளது.

குறிப்பாக இளைஞரை தாக்கிய கும்பல் கூறும் தகவல்கள், தீபாவளிக்கு முன்னதாக கடந்த ஆறாம் தேதி தான்தோன்றிமலையில் கார் சென்று கொண்டிருந்தபோது இளைஞர் காரை நோக்கி கல்லை எறிந்ததாகவும் ஆனால் இதுவரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. காரின் கண்ணாடி உடையாத நிலையில் காரை சரி செய்வதற்கு இளைஞரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் அக்கும்பல் கேட்டுள்ளது. இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் தகராறு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதாகவும், முன்னுக்குப் பின் முரணாக கூறும் தகவல்கள், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது .

இந்நிலையில் கரூரில் பட்டப் பகலில் இளைஞரை தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காட்சியில் இரண்டு பேர் பார்சுனர் காரில் இருந்து இறங்கி இளைஞரை வலுக்கட்டாயமாக சட்டையை பிடித்து இழுத்து வரும் காட்சியும் பதற்றத்துடன் அந்த இளைஞருடன் வந்த தோழி கூச்சலிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு கடத்தல் கும்பல் என்ன நோக்கத்திற்காக அந்த இளைஞரை பொது இடத்தில் வைத்து தாக்கி காரில் ஏற்றி கடத்த முயற்சித்தது என்பதை கண்டறிந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !