கரூரில் பட்டப் பகலில் யாரும் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள கரூர் கலெக்டர் பிரசன்னா ராமசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆத்தூர் புதூரில் வசித்து வரும் ராஜ்குமார், வயது 36, த/பெ நல்லதம்பி என்பவர் வீட்டில் கடந்த மாதம் ஆக்டோபர் 02ஆம் தேதி தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டிற்குள் புகுந்து 4½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.1,30,000/- என மொத்தம் ரூ.1,96,000/- மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது சம்மந்தமாக, கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Buy Now ! Pay Daily !
இவ்வழக்கில் சம்பவ இடத்தில் கிடைக்கபெற்ற CCTV பதிவுகளை கொண்டு ஆராய்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கிழவணியங்குடி செல்வம் மகன் மணிவண்ணன், வயது 24, என்பவரை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்படி எதிரியை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி IPS அவர்களின் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். பிரசன்னா ராமசாமி IAS., அவர்கள் உத்தரவின்படி இன்று (13.11.2026 ஆம் தேதி) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள், மேலும் தனியாக விரிவாக்கப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் CCTV Camera பொருத்த வேண்டும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.ரகுபதி IPS அவர்கள் கரூர் மாவட்ட பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்






