← முகப்புகரூர் →

கரூரில் பைனான்சியர் வீட்டில் ரூ.7.90 லட்சம் கொள்ளை!

கரூரில் பைனான்சியர் ராமலிங்கம் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ.2.90 லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகைகள் மற்றும் சிசிடிவி பதிவுகள் மூலம் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

கரூரில் பைனான்சியர் வீட்டில் ரூ.7.90 லட்சம் கொள்ளை!

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு, கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சென்னையில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவ்வப்போது சென்னை சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இன்று (நவம்பர் 19) காலை சென்னையிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிய ராமலிங்கம், வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் ரொக்கப் பணம், 4 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.7.90 லட்சம் எனக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பூட்டிய பைனான்சியர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பூட்டிய பைனான்சியர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !