← முகப்புகன்னியாகுமரி →

அரிய வகை சிப்பி மீன்களின் சீசன் தொடங்கியது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அரிய வகை சிப்பி மீன்கள் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. சிப்பி மீன்களில் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் இதை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் அரிய வகை மீன்களில் ஒன்றான சிப்பி மீன்கள், ஹோட்டல்களில் முக்கிய டிஸ்ஸாக பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

இந்தவகை மீன்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளான குளச்சல், முட்டம், இனையம் போன்ற பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடலுக்கு அடியில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளில் படிந்திருக்கும் இந்த மீன்களை மீனவர்கள் பிரத்யேக கண்ணாடிகளை அணிந்து மூச்சு பிடித்து முக்குளித்து உளி மற்றும் கத்தியால் பிரித்தெடுத்து கரைக்கு கொண்டு வருகின்றனர்

அதிக மருத்துவ குணம் சிப்பி மீன்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு விசேஷ உணவு என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும் இந்த அரிய வகை சிப்பி மீன்களின் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் வெப்பம், கடல் மாசு இயற்கை கடல் சீற்றம் காரணமாக, சிப்பி மீன்கள் அழிவின் விளிம்பிற்கே சென்று விட்டதாக குளச்சல் பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உயிரைப் பணையம் வைத்து மூச்சடக்கி முக்குளித்து பிடித்து வந்த போதிலும், ஒரு பெட்டி சிப்பி மீனின் விலை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து தற்போது 6-ஆயிரம் ரூபாய்க்கு குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி முக்குளித்து சிப்பி மீன் எடுக்கும் தங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்

சிப்பி மீன்களின் வரத்து குறைந்து காணப்படுவதால் அவற்றை வாங்க ஆர்வம் காட்டி குவியும் அசைவ பிரியர்களும் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்குவதால் பெரும்பாலான சாமனியர்கள் சிப்பி மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !