மும்பையில் கடந்த நவம்பர் 26, 2008 ஆம் ஆண்டு இதே நாளில், கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்குள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது போன்ற தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையிலும் கடந்த பல வருடங்களாக சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Buy Now ! Pay Daily !
அந்த வகையில் குமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், தமிழக போலீசாருடன் இணந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று OPERATION "SEA VIJIL" என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒத்திகையின் மூலம் குமரி கடல் பகுதியில் அதிவிரைவு படகுகள் மூலமாக ரோந்து பணியில் ஈடுப்படுவதுடன் தீவிர காண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடல் பகுதி மற்றும் கடற்கரை கிராமங்களில் சந்தேகப்படும்டியாக மர்ம நபர்கள் தென்பட்டால் கடலோர பாதுகாப்பு குழும போலிசாருக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

