← முகப்புகன்னியாகுமரி →

ஜான் ஆரோக்கியசாமியும் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் - IPDS திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகாரின் பேரில், ஜூலை 1 அன்று திருவல்லிக்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அரசியல் ஆய்வாளர் IPDS திருநாவுக்கரசு நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ஜான் ஆரோக்கியசாமியும் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் - IPDS திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி!

அவர் கூறியதாவது;

தமிழக வெற்றி கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை தான். நானே முதலமைச்சரிடம் விஜயுடன் 2 மணிநேரம் பேசி உள்ளேன். தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சிக்கு வர மற்ற கட்சிகளுடன் நானே பேசினேனே தவிர, யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஜான் ஆரோக்கியசாமியுடன் தான் நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டேன் அவரை கைது செய்ய வேண்டும். ஆதவ் அர்ஜூனா மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூண்டுதலில் தான் என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கேட்டு உள்ளோம். செந்தில் பாலாஜிக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. திமுக தலைவரை நான் பார்க்கவில்லை இது முற்றிலுமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. அரசியல் வழக்குக்காக என்னை போலீசார் அடித்தனர். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது ஆனால் அதை இயக்குவது ஆதவ் அர்ஜூனா.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !