← முகப்புமயிலாடுதுறை →

மடிப்பிச்சை ஏந்தி தலையில் துண்டை போட்டு கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மடிப்பிச்சை ஏந்தி, தலையில் துண்டை போட்டு கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம், கூட்டுறவு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மயிலாடுதுறையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

மடிப்பிச்சை ஏந்தி தலையில் துண்டை போட்டு கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்!

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பெரும் இடர்பாடு கொண்ட ஆண்டாகவே இருந்து வருகிறது. எல்-நினோ காரணமாக மழை பெய்வதில் ஏற்பட்ட மாற்றங்களால் மழை வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் பல கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த பயிர் கடன்கள் ரத்தை சில நிபந்தனைகளுடன் பகுதியளவிலேயே செயல்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி இன்று மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி கூட்டுறவு பயிர் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், பருவ மழை மற்றும் காவிரியில் நீர்வரத்து இல்லாததால் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ 50,000 வழங்கிட வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50 ற்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்று, தலையில் துண்டை போட்டு கொண்டு மடி பிச்சை ஏந்தி, பிச்சை எடுத்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் விவசாய முகாம்களை நடத்தி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவது கண்டனத்துக்கு உரியது என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !