← முகப்புமயிலாடுதுறை →

நீண்ட நேரமாக ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட இரண்டு ஆண் மயில்கள்!

சீர்காழி அருகே சாலையில் நீண்ட நேரமாக ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட இரண்டு ஆண் மயில்கள் ; சண்டையைக் கண்டு ரசித்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ச்சி :-

நீண்ட நேரமாக ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட இரண்டு ஆண் மயில்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசியப் பறவையான மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சீர்காழி அருகே சாலையில் இரண்டு ஆண் மயில்கள் நீண்ட நேரமாக ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்ட காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில், தற்போது விளைநிலங்களில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், வயல் பகுதிகளில் உணவு தேடி சுற்றித்திரிந்த மயில்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. இதனால் கிராமப்புறங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் சில மயில்கள், அங்குள்ள வளர்ப்பு நாய்களால் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம் மற்றும் கடலோரக் கிராமங்களில் மாங்குரோவ் காடுகள் மற்றும் சவுக்கு மரக்காடுகள் அதிகளவில் உள்ளதால், மயில்கள் தங்குவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், சீர்காழி அருகே எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள சாலையில் இரண்டு ஆண் மயில்கள் நீண்ட நேரமாக ஒன்றையொன்று ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டு சண்டையிட்டன. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும், மயில்களின் சண்டைக் காட்சியைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த அரிய காட்சி அப்பகுதி மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !