← முகப்புஈரோடு →

ஈரோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், தரமான உயர் சிகிச்சை வழங்கவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகள் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையைச் சரிசெய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையைப் பாதுகாத்து மேம்படுத்தவும், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மேம்பாலம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். அப்போது, மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையைப் பாதுகாத்து தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் எவ்விதத் தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை வழங்கப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !