← முகப்புவேலூர் →

வேலூரில் 200 போதை மாத்திரைகள் பறிமுதல்!

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து 200 மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் 200 போதை மாத்திரைகள் பறிமுதல்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 200 போதை மாத்திரைகளை குடியாத்தம் நகர போலீசார் பறிமுதல் செய்து, அதனை எடுத்து வந்த 26 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் அருகே உள்ள மேல் ஆலத்தூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் குடியாத்தம் நகர போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது, அதில் 200 போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதையடுத்து, அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் மேல் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் (26) என்பதும், ஏற்கனவே அவர் மீது போதை மாத்திரைகள் கடத்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அவர் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முஸ்தாக்கைக் கைது செய்த குடியாத்தம் நகர போலீசார், அவரிடமிருந்து 200 போதை மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, இந்த போதை மாத்திரை கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !