அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்.
இக்கோவில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிரசித்தி பெற்ற தலமாகவும் கருதப்படுகிறது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்குள் நுழையவே முடியாத அளவிற்கு முட்புதர்களாக காணப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
கோவிலின் கோபுரத்தில் வளர்ந்துள்ள ஆலமரம் மற்றும் அரச மரங்களின் வேர்கள் கோவில் கருவறை வரை சென்றுள்ளது. இதனால் கோவிலுக்குள் செல்லவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அச்சப்படும் சூழலும் காணப்படுகிறது. கோவில் சுவர்கள் மற்றும் தெய்வங்கள் சிதலமடைந்துள்ளதால் பல்வேறு விஷ பூச்சிகள் நடமாட்டமும் காணப்படுகிறது.
இது குறித்து பலமுறை இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் பக்தர்கள், ஒரு கால பூஜை கூட செய்ய இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இப்பகுதியில் இந்த கோவில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என வருத்தத்துடன் கூறுகின்றனர் மக்கள். மேலும், கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி, கோபுரங்கள் மற்றும் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:-
நாராயணன்,
சரண்ராஜ் விக்கி
(அங்கராயநல்லூர் கிராமம்)


