← முகப்பு

இணையத்தைக் கலக்கும் ஜி.வி. பிரகாஷின் ‘செங்காட்டு தேவதையே’.

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சஜிஷ்ணா சேவியர், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காட்டுப் பின்னணியில் அமைந்துள்ள காட்சிகளும், விறுவிறுப்பான கதைக்களமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

முதல் பாடல் வெளியீடு

இந்த நிலையில், ‘அரிகொம்பன்’ திரைப்படத்திலிருந்து ‘செங்காட்டு தேவதையே’ என்ற முதல் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை கவிலன் எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !