← முகப்புதிருப்பூர் →

மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது...!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கும் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது...!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா (திருப்பூர் வடக்கு), பாலமுருகன் (திருப்பூர் தெற்கு), ராம்குமார் (பல்லடம்) ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கேக்குகளை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,404 பள்ளிகளில் பயிலும் 1,90,124 மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநியோகிக்கப்படும் கேக்குகளின் தரம் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழக அரசுக்கு 'பம்பர் பரிசு' கிடைத்ததாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களின் ஆதரவாலும் கடின உழைப்பாலும் கிடைத்த வெற்றி இது என்றும், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதே அரசின் நோக்கம் என்றார். மேகதாது அணை விவகாரத்தில், சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழக அரசின் நிலைப்பாடு தொடரும் என உறுதிபடத் தெரிவித்தார். பெரியார் அறிவுலகம் தொடர்பான முறைகேடு புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்துப் பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், பிற நூலகங்களிலும் குறிப்பிட்ட அச்சகத்திலிருந்து புத்தகங்கள் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகாவும் தெரிவித்தார். திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதாகவும், கடந்த காலங்களில் போலீசாருக்கு உரிய சுதந்திரம் கிடைக்கவில்லை எனவும் அதனால் குற்றங்கள் பெருகியதாகவும், தற்பொழுது முதல்வல் விஜய் ஆட்சியில் குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அதை மறுத்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் துப்பாக்கிச் சூடு குறித்த கருத்துக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால், ஒவ்வொரு விவகாரத்திலும் சட்டப்படியே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். இப்படி அவர் பேசுவதால் தான் அவரும் தோற்றார், அவரது கட்சியும் படு தோல்வி அடைந்தது என்றார். துணை சபாநாயகர் தொடர்பான வீடியோ விவகாரம் முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !