தமிழ்நாட்டின் சமூகநீதித்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் விடுதலை சிறுத்திகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு. சமீபத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்ற வன்னி அரசு, காட்டுக்குள் சென்று யானைகள் நடமாடும் இடத்தில் செல்வதும், புலியை விரட்டிச் செல்வதுமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
அதை தொடர்ந்து அமைச்சர் வன்னி அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டதாகவும், வன உயிர்களை தொந்தரவு செய்யும் விதத்தில் நடந்துக் கொண்டுள்ளதாகவும் பலர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த அமைச்சர் வன்னி அரசு, தான் விலங்குகளை துன்புறுத்தும் வகையில் எதுவும் செய்யவில்லை என்றும், மேலும் இதுபோன்று பல காடுகளுக்குள் தான் சென்று தங்கியிருந்துள்ளதாகவும் பேசியிருந்தார்.
Buy Now ! Pay Daily !
இதை தமிழக வனத்துறை பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட்டாலும் எல்லையில் உள்ள வனப்பகுதி என்பதால் கர்நாடக அரசு இதை கடுமையாக அணுகியுள்ளது. முதுமலை வனப்பகுதி, கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியுடன் இணைந்த பகுதி என்பதால் அப்பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி விலங்குகளுக்கு தொல்லைக் கொடுக்கும் விதமாக நடந்த வன்னி அரசு மீது கர்நாடக வனத்துறை நடவடிக்கை எடுக்கும் என கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர் ”வனத்தின் சட்டத்திட்டங்கள் அமைச்சராக இருந்தாலும், சாமானியனாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒன்றுதான். அனைவரும் பதவி, பேதமின்றி வனத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை தற்போது கர்நாடகா கையில் எடுத்துள்ள நிலையில் இதில் தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை கையில் எடுக்கப்போகிறது, அமைச்சர் வன்னி அரசுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்குத் தொடருமா உள்ளிட்ட பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.






