← முகப்பு

சோனியா காந்தி நூல் வெளியீட்டைச் சுற்றி வெடிக்கும் சர்ச்சைகள்!

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்காதது, ராகுல் காந்தியின் பேச்சு, பாஜகவின் விமர்சனம் மற்றும் சிவன்–பார்வதி படத்துடன் ஸ்டாலின் அளித்த பதிலடி எனத் தொடர்ந்து நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டைச் சுற்றி வெடிக்கும் சர்ச்சைகள்!

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூல் Belonging: A Journey of Love நவம்பர் 10ஆம் தேதி வெளியானது. தனது வாழ்க்கைப் பயணம், குடும்பம், அரசியல் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பதிவு செய்துள்ள இந்த நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்ச்சி நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?

இந்த விழாவில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றது. இதுகுறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், தனக்கு விழாவுக்கான அழைப்பிதழ் வரவில்லை என்றும், இது தொடர்பாகத் தனது உதவியாளரிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், சோனியா காந்தியுடனான தனிப்பட்ட மரியாதைக்கும், விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு விவகாரத்துக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டது.

ராகுல் காந்தி அலுவலகம் தொடர்புகொண்டதா?

இதற்கிடையே, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதற்காக ராகுல் காந்தியின் அலுவலகம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், ராகுல் காந்தி நேரடியாகப் பேச விரும்புவதாக ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டபோது, வேறு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருப்பதால் பேச முடியாது என அவர் கூறியதாகவும், சோனியா காந்தியின் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தங்களுடன் (திமுக) கூட்டணி இருந்த காங்கிரஸ் ஒரே நாள் இரவில் த.வெக-வில் இணைந்தது என, தேர்தலுக்குப் முன்பும் பிறகும் திமுக–காங்கிரஸ் உறவில் ஏற்பட்ட விரிசலே இந்தச் சூழலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், சோனியா காந்திக்கு ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், திமுகவும் அவரை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலினுக்கு அழைப்பு வந்திருக்கலாம்; ஆனால் அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறினார். அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் திமுகவுக்கு உரிமை உள்ளது, அதற்காக யாரும் தங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பேச்சால் புதிய சர்ச்சை

இதற்கிடையே, சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசிய கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. விழாவில் தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது தாயார் சோனியா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் மடியில் அமர்ந்திருந்ததைப் பார்த்த நினைவுகளைப் பற்றிப் பேசினார்.

ராகுலின் இந்தப் பேச்சை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். சோனியா காந்தியின் சிறப்பான நாளில் அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் ராகுல் பேசியதாக ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கர்நாடகாவில் உள்ள கோயில் ஒன்றில் இடம்பெற்ற சிவன்–பார்வதி சிற்பத்தின் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் மனங்களில் பயம், கோபம், வெறுப்பு நிறைந்திருப்பதாகவும், அதனால் அவர்களால் அன்பை உணரவோ வெளிப்படுத்தவோ முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

மேலும், உண்மையான இந்துவாக அந்த வெறுப்பு உணர்விலிருந்து அவர்களை விடுவிப்பது தனது கடமை என்றும், அன்பு மற்றும் ஒன்றிணைந்திருப்பதன் மகிழ்ச்சியை அவர்கள் உணர வேண்டும் என்றும் பதிவின் இறுதியில் 'சத்யம் சிவம் சுந்தரம்' என்றும் எழுதியிருந்தார்.

ராகுலின் இந்தப் பதிவுக்கு ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் எதிர்வினையாற்றினார். சாதாரண மனிதர்களை சிவன்–பார்வதியாகச் சித்தரிப்பது பக்தி அல்ல; அது ஆணவத்தின் வெளிப்பாடு என விமர்சித்தார். இதனால் நூல் வெளியீட்டு விழாவைச் சுற்றிய அரசியல் விவாதம் மேலும் தீவிரமடைந்தது வருகிறது.

ஒருபுறம், சோனியா காந்திக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தியின் அலுவலகம் அழைப்பு விடுக்க முயன்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்.எஸ்.பாரதியின் விளக்கமும் இந்த விவகாரத்தில் புதிய கோணத்தைச் சேர்த்துள்ளது. மறுபுறம், ராகுல் காந்தியின் பேச்சு, பாஜக தலைவர்களின் விமர்சனம் மற்றும் அவரது பதிலடி ஆகியவை நூல் வெளியீட்டு விழாவைச் சுற்றிய தனி சர்ச்சை என இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !