← முகப்பு

சச்சின் முதல் ஷாரூக்கான் வரை! அனிருத் – காவ்யா Receptionக்கு சென்னையில் குவியும் பிரபலங்கள்!

சமீபத்தில் அனிருத்-காவியா மாறன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிரிக்கெட், சினிமா உலக பிரபலங்கள் பலர் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சச்சின் முதல் ஷாரூக்கான் வரை! அனிருத் – காவ்யா Receptionக்கு சென்னையில் குவியும் பிரபலங்கள்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கு கடந்த நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டில் சொந்தங்கள் சூழ சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. அந்த திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. திருமணத்தை சொந்தங்கள் சூழ நடத்தியிருந்தாலும், வரவேற்பை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை ஐடிசி க்ராண்ட் சோழா ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வரும், நடிகருமான ஜோசப் விஜய் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் சினிமா பின்புலம் கொண்டவர் என்பதாலும், காவ்யா குடும்பத்தினர் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதாலும் இருதரப்பிலிருந்தும் பல முக்கியமான பிரமுகர்கள் இந்த வரவேற்பில் கலந்துக் கொள்ள உள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சமீபத்திய தகவல்களின்படி, அனிருத் – காவ்யா மாறன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவுள்ள பிரபலங்களின் உத்தேச கணிப்பு பட்டியல். கிரிக்கெட் பிரபலங்கள்: எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, டேல் ஸ்டெய்ன், சச்சின் டெண்டுல்கர், பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள்.

திரைப்படத் துறை பிரபலங்கள்: ஷாருக்கான், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி, ஹிருத்திக் ரோஷன், சாரா அலி கான், ராஷ்மிகா மந்தனா.

இவர்கள் தவிர மேலும் பல கோலிவுட் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பிரமுகர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !