விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் அஷ்வின். இவரும் பாடகியான ஷிவாங்கியும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் செய்யும் க்ரஷ் க்யூட் மொமெண்ட்களுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். அதன்மூலமாக அஷ்வினுக்கும் நிறைய பெண் ரசிகைகள் உருவானார்கள். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அஷ்வின் ’என்ன சொல்லப் போகிறாய்’ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்கள் நடித்தவர், பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்து வெளியான ’செம்பி’ படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்த அஷ்வின் தற்போது தனது திருமண வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் விக்ரம், படிக்காதவன், மாப்பிள்ளை என ரஜினி, கமல் படங்கள் பலவற்றை இயக்கியவர் இயக்குனர் ராஜசேகர். இவரது பேத்தி புவனேஷ்வரிக்கும், அஷ்வினுக்கும்தான் திருமணம் நடந்துள்ளது.
Buy Now ! Pay Daily !
திருமண விழாவில் அஷ்வினும் புவனேஷ்வரியும் சேர்ந்து அஷ்வின் படப் பாடலுக்கே சேர்ந்து நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. அஷ்வின் – புவனேஷ்வரி தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், அஷ்வினின் ரசிக, ரசிகைகளும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






