மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்திக்கு அறிவுரை வழங்கும் வகையில் பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ”கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களாக காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அந்த கட்சி மற்றும் கட்சி தலைவரின் செயல்பாட்டின் அடிப்படையிலானது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது ஏமாற்றங்களை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகிறது.
Buy Now ! Pay Daily !
காங்கிரஸ் கட்சிக்கு 10 ஆண்டுகள் மக்களை ஆள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த காலக்கட்டத்தில் அவர்கள் ஊழல் செய்வதை தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான இந்த 12 ஆண்டு கால ஆட்சியில் 4 அணா மதிப்புள்ள ஊழல் குற்றச்சாட்டுக் கூட பிரதமர் மோடிக்கு எதிராக கூறப்படவில்லை.
ராகுல்காந்திக்கு நான் ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன். சும்மா வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும், எங்கள் ஆட்சியை குறைக் கூறுவதுமாக இருந்து விட்டால் மட்டுமே நீங்கள் ஆட்சியமைத்து விட முடியாது. வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு பயணம் செய்தீர்களானால் உங்களுக்கான நாள் வரக்கூடும்.
அதை விடுத்து நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உலகமே புகழக்கூடிய பிரதமர் மோடியை அவமதிப்பு செய்வதன் மூலமாக, ஆட்சியை பிடிக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியையும் அவமதித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என பேசியுள்ளார்.






