← முகப்பு

சிங்கத்துக்கு உண்டான மரியாதையே போச்சுப் பா...! - சிங்கத்தை பைக்கில் விரட்டிய ஊழியர்கள் பணி நீக்கம்!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பார்டி சஃபாரி பூங்காவில், சிங்கம் ஒன்றை வனத்துறை ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் துரத்திச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த மூன்று வனத்துறை ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சிங்கத்துக்கு உண்டான மரியாதையே போச்சுப் பா...! - சிங்கத்தை பைக்கில் விரட்டிய ஊழியர்கள் பணி நீக்கம்!

தாரி கிர் கிழக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பார்டி சஃபாரி பூங்காவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய காணொளியில், மூன்று வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், சிங்கம் ஒன்றைப் பல திசைகளிலிருந்தும் சூழ்ந்து திறந்தவெளி மைதானத்தை நோக்கி ஓடும்படி விரட்டிச் செல்வது பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவரின் கையில் 'வாக்கி-டாக்கி' இருந்ததும், அதேசமயத்தில் வனத்துறைக்குச் சொந்தமான அரசு பொலிரோ வாகனம் அவ்வழியாகச் சென்றதும், இதில் வனத்துறை ஊழியர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியது. பல திசைகளிலிருந்தும் தொடர்ந்து துரத்தப்பட்டதால் ஆக்ரோஷமடைந்த அந்தச் சிங்கம், ஒருகட்டத்தில் தன்னைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பிப் பாய்ந்து துரத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. தீபாவளி விடுமுறையையொட்டிப் பூங்காவிற்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்களுக்கு சிங்கத்தை மிக அருகில் காண்பிப்பதற்காகவே வனத்துறை ஊழியர்கள் இவ்வாறு அவசரகதியில் சிங்கத்தை விரட்டிச் சென்றதாகச் சில வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுந்ததைத் தொடர்ந்து, வனத்துறை உயரதிகாரிகள் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டனர். இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஜெய்பால் சிங், மாலை நேரங்களில் சிங்கங்களை அவற்றின் இருப்பிடமான 'க்ரால்' எனப்படும் வேலியிடப்பட்ட பகுதிக்குத் திருப்பி விடுவது வழக்கமான நடைமுறைதான் என்றும், ஆனால் பொதுவாக ஜீப் மூலமாகச் செய்யப்பட வேண்டிய இப்பணியைச் சில ஊழியர்கள் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட மூன்று ஒப்பந்த ஊழியர்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !