← முகப்புதூத்துக்குடி →

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்!

திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணம் -சிங்கித்துறை பகுதியில், புதிதாக திருமணமான இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிரியார் ஒருவர் மீது பெண்ணின் கணவர் புகாரளித்துள்ளார் .

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணம் -சிங்கித்துறை பகுதியை சேர்ந்த யுனோக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வ மாதா ஆலயத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் யுனோக் வெளிநாட்டில் கப்பலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து கடந்த 20-ந் தேதி ஊர் திரும்பிய யுனோக்கிற்கு காதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சந்தேகத்தின் பேரில் மனைவியின் மொபலை பார்த்தபோது, அவரது மனைவி செல்வமாதா ஆலயத்தின் பாதிரியாராக இருக்கக்கூடிய ஷிவாகருடன் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.

இரவூ நேரத்தில் பாதர் ஷிவாகருடன் வீடியோ காலில் பேசி அந்தரங்கமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது காதல் மனைவியிடம் கேட்டபோது அவர் பாதிரியாருடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் யோகன், தான் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி பாதிரியார் ஷிவாகர் தனது மனைவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து ஏமாற்றியதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு சென்றநிலையில் அவரது இளம் மனைவியை பாதிரியார் பாலியல் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !