மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து இயக்க நிர்வாகிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமாரை இன்று காலை காவல்துறையினர் அவரது வீட்டிலேயே வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று இரவு வசந்தகுமாரின் வீட்டின் முன்பு திருப்பரங்குன்றம் தீபத்தூணை நினைவூட்டும் வகையில் மாதிரி தீபத்தூண் ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமாரின் வீட்டின் முன்பே தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

