← முகப்புதூத்துக்குடி →

மருத்துவமனைக்கு பெயர் சூட்டும் அறிவிப்பு என்ன ஆனது?

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தியாகி ஒருவரின் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை பெயர் மாற்றப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்கு பெயர் சூட்டும் அறிவிப்பு என்ன ஆனது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்றது.

அப்போது விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தியாகி நல்லகண்ணு பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தியாகி நல்லகண்ணுவின் தியாகத்தையும், பொதுவாழ்வையும் போற்றும் வகையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், முதல்வர் அறிவிப்பு வெளியாகி சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இதுவரை தியாகி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தகவல் அலுவலர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணை விவரம் எதுவும் இம்மருத்துவமனைக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கான அரசாணை விவரம்கூட சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குக் கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவத்துறையினர் அளித்துள்ள இந்தப் பதில், தியாகி நல்லகண்ணுவின் குடும்பத்தினர், ஸ்ரீவைகுண்டம் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரின் இந்த அறிவிப்பை தற்போதைய முதல்வர் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !