← முகப்புதேனி →

ஆமணக்கு விதை சாப்பிட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை!

தேனி மாவட்டம் வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆமணக்கு விதை சாப்பிட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை!

தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தப் பள்ளியில் மஞ்சனூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் ஆகிய மலைக் கிராமங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

​நேற்று மதியம் மலைப்பகுதியில் விளைந்திருந்த காட்டு ஆமணக்கு விதைகளைக்மாணவர்கள் சிலர் விளையாட்டாகச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற குழந்தைகளில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​இன்று காலை பள்ளிக்கு வந்த மேலும் 10 மாணவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளிச் சீருடையுடனேயே ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

​இந்தச் சம்பவம் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !