← முகப்புதேனி →

பெரியகுளம் அருகே கனிம வளங்கள் கொள்ளை!

தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கனிம வளங்கள் கொள்ளை!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் பகுதியில் சுரங்கத்துறை அனுமதி அளித்துள்ள பட்டா இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத பட்டா இடங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே இது குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் மற்றும் பெரியகுளம் தாசில்தார் தேனி மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி சட்ட விரோத கனிமவள கொள்ளையில் ஈடுபட்டோருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் சட்ட விரோதமாக வாகனங்களை வைத்து தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அப்பகுதியில் அனுமதிக்கப்படாத இடங்களில் அதிகாரிகளின் துணையோடு மணல் அள்ளப்படுவதாகவும், தங்களுடைய சொந்த விவசாய நிலத்தில் இருக்கும் மண்ணை அள்ள அனுமதி கேட்டால் சட்டத்தில் இடமில்லை என்று கனிமவளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

உரிய அனுமதியின்றி தொடர்ந்து ஜெயமங்களம் கணேசபுரம் போடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது எனவே இது குறித்து உரிய ஆய்வு நடத்தி சட்ட விரோத கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !