← முகப்பு

உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி யார்?

உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் இந்திய வம்சாவளித் தலைவர்களின் சமீபத்திய பட்டியலைத் தொழில்நுட்ப மற்றும் வணிகத் துறை ஆய்வுகள் வெளியிட்டுள்ளன. இதில் உலகின் சக்திவாய்ந்த இந்திய வம்சாவளி நபர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார்.

உலகளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி யார்?

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை உலக அளவில் தொழில்நுட்பத் துறையை வழிநடத்தும் மிக முக்கியமான இந்திய வம்சாவளித் தலைவர்களில் ஒருவராவார்.

தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, கரக்பூர் ஐஐடி (IIT Kharagpur) கல்வி நிறுவனத்தில் உலோகவியல் பொறியியல் (Metallurgical Engineering) பட்டமும், தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும், வார்டன் பள்ளியில் (Wharton School) எம்பிஏ (MBA) பட்டமும் பெற்றார்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் கூகுள் டூல்ஸ் மற்றும் கூகுள் டூல்பார் தயாரிப்புகளில் பணியாற்றினார். இவரது சிறப்பான பங்களிப்பால், உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோம் (Google Chrome) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். மேலும், ஆண்ட்ராய்டு துறையின் தலைவராகவும் பொறுப்பேற்று அதை உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன்களில் பரவச் செய்தார்.

2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். இவரது தலைமையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது.

சுந்தர் பிச்சை முதலிடம்

இந்நிலையில் உலக அளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி நபர்களின் பட்டியலில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைமுதலிடத்தைப் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா இரண்டாவது இடத்திலும், மைக்ரான் டெக்னாலஜியின் சஞ்சய் மெஹ்ரோத்ரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

உலகளாவிய இந்திய வம்சாவளித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வழிநடத்தும் சுமார் 200 முக்கிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனங்களின் மதிப்பு 53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) தாக்கம் மிக முக்கியமானது. பட்டியலில் உள்ள 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன; அவற்றின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 10.7 டிரில்லியன் டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதுடன், கடந்த ஆண்டில் 2.5 டிரில்லியன் டாலர் வருவாயும், 416 பில்லியன் டாலர் நிகர லாபமும் ஈட்டியுள்ளன.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.